திண்ணை

ஜி தொடங்கும் போதே ஒரு கடினமான தலைப்பை கொடுத்திருக்கார். (அட இந்த பயல கூட மரியாதையா எழுதனுமா?) "டேய் வென்று" என்று புதுவை பேச்சுத் தமிழிலேயே அழைக்கலாம்.
திண்ணை! கிராம கதைகளை கொண்ட படங்களில் அதிகம் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அதைக் கூட பார்ப்பது இல்லை. :) நான் புதுவை வாசி என்பதாலோ என்னவோ திண்ணை வீடுகளை மிகக் குறைவாகவே பார்த்திருக்கிறேன். ஆனால் நானும் திண்ணை கொண்ட வீட்டில் என்னுடைய குழந்தை பருவத்தை கழித்திருக்கிறேன். குழந்தை பருவம்னா 6 முதல் 10 வயது. அது ஒரு வாடகை வீடு.
திண்ணைனா எனக்கு முதல்ல ஞாபகம் வருவது கார்த்திகை தீபம் தான். மற்ற வீடுகளை விட எங்கள் வீட்டு முன்னால் அதிக இடம் விட்டிருக்கும். திண்ணையும் பெரியதாக இருக்கும். அதனால் தீபத் திருநாள் அன்று என் அம்மா, சித்தி இருவரும் நிறைய விளக்குகளை வாங்கி வருவர். நானும் என் தம்பியும் அதை சுத்தம் செய்வதிலிருந்து எண்ணெய் ஊற்றி ஏற்றுவது வரை செய்வோம். ஒரு விளக்கு கூட அணைய விட மாட்டோம். எண்ணெய் அளவு சிறிது குறைந்தால் கூட உடனேயே ரீஃபில் தான் :). எங்க அம்மா "டேய்! எண்ணெய் விக்கிற விலையில ஏன்டா வீணாக்கறீங்க? எல்லாம் ஒரு தடவ எறிஞ்சா போதும்" என்று திட்டுவார்கள். அதற்கெல்லாம் சளைத்தவர்களா நாங்கள். எங்களுக்கு டைர்ட் ஆகிற வரைக்கும் விட மாட்டோம்.
எங்க சித்திக்கு அப்போது கல்யாணம் ஆகவில்லை. எங்களுடன் தான் இருந்தார். அவங்க தான் பலி கெடா. விளக்குகளை டிசைன் டிசைனாக வைக்க சொல்லுவோம் வரிசையா இல்லாம. என்னோட தம்பி தன்னோட டிராயிங் புக்க எடுத்து வந்து, "இந்த பூ டிசைன்ல வை, அந்த பூ டிசன்ல வை" அப்படினு படுத்துவான். எங்க சித்தியும் கொஞ்சம் வேலை பார்க்கும். அப்புறம் "இந்த டிசைன்லாம் இதுல வச்சா நல்லா இருக்காது. விளக்கெல்லாம் வரிசையா தான் வைக்கனும். இல்லனா சாமி கண்ண குத்திடும்"னு ஒரு பிட்ட போடும். நாங்களும் அதற்கு பயந்து விட்ருவோம். எல்லாம் அந்த இரவு மட்டும் தான். காலையில எல்லாத்தையும் எடுத்து வைக்க வேண்டியது அம்மாவோட வேலை. :) எங்கள் வீட்டில் தாவாரம் (பீமாவில் விக்ரம் த்ரிஷா வீட்டில் விழுவானே அது!) இருந்ததால், திண்ணையை சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் அதிகமாக பயன் படுத்தியது இல்லை.
நான் கேரம் போர்டு விளையாட்டை கற்றுக் கொண்டது திண்ணையில் தான். எதிர் வீட்டு அண்ணன் கூட தான் அதிகமா விளையாடி இருக்கேன். நானும் என் தம்பியும் மாமாவிடம் கொட்டு வாங்கி படித்ததும் அந்த திண்ணையில் தான். நான் மூன்றாவது படித்திருக்கும் போது வேறு ஒரு வீட்டிற்கு இடம் பெயர்ந்து போக வேண்டியதாயிற்று. சமீபத்தில் பழைய வீடு வழியாக சென்ற போது அது முழுவதுமாக மாறி இருந்தது. திண்ணை மிஸ்ஸிங். :(
நம்முடைய அடுத்த தலைமுறையினர் "திண்ணை"யின் அர்த்தத்தை அகராதியில் தான் பார்க்க நேரிடும் போலிருக்கு.
ரம்யாவும் திவ்யாவும் சும்மா இருக்காங்கனு கேள்வி பட்டேன். சங்கிலியை தொடர அவங்கள அழைக்கிறேன்.

11 Comments:
At Thursday, August 28, 2008 11:36:00 AM,
Ramya Ramani said…
\\"இந்த டிசைன்லாம் இதுல வச்சா நல்லா இருக்காது. விளக்கெல்லாம் வரிசையா தான் வைக்கனும். இல்லனா சாமி கண்ண குத்திடும்"னு ஒரு பிட்ட போடும்.\\
ஹா ஹா ஹா நீங்க என்ன படுத்திருந்தீங்கன்னா அவங்க அப்படி சொல்லிருப்பாங்க!!
\\நம்முடைய அடுத்த தலைமுறையினர் "திண்ணை"யின் அர்த்தத்தை அகராதியில் தான் பார்க்க நேரிடும் போலிருக்கு.\\
Exactly :(
At Thursday, August 28, 2008 11:37:00 AM,
Ramya Ramani said…
P.S : Do u really want the comment box to pop up? It would be comfortable if it isn't so.. Just a suggestion.
At Thursday, August 28, 2008 12:14:00 PM,
Hariks said…
நன்றி ரம்யா! நீங்க சொன்ன மாதிரியே கமென்ட் செட்டிங்ஸை மாத்திட்டேன்
At Thursday, August 28, 2008 8:10:00 PM,
ஜியா said…
kalakkal makka...
//நம்முடைய அடுத்த தலைமுறையினர் "திண்ணை"யின் அர்த்தத்தை அகராதியில் தான் பார்க்க நேரிடும் போலிருக்கு.//
:(((
Neeyum rendu pera maatti vidanumde.. summaa escape aaga koodaathu... Intha Ramya kooda summathaan irukaanga.. avungala maatti vitturu ;))
At Thursday, August 28, 2008 9:29:00 PM,
Ramya Ramani said…
\\Neeyum rendu pera maatti vidanumde.. summaa escape aaga koodaathu... Intha Ramya kooda summathaan irukaanga.. avungala maatti vitturu ;))
\\
En En ippadi hmmmm ????
At Thursday, August 28, 2008 9:33:00 PM,
Ramya Ramani said…
Murugs,
Neengalum geeya pechu kettu matti vittuteengala.. thinnai anubavam illenga..anyways muyarchi panren
At Thursday, August 28, 2008 9:33:00 PM,
Ramya Ramani said…
\\Murugs said...
நன்றி ரம்யா! நீங்க சொன்ன மாதிரியே கமென்ட் செட்டிங்ஸை மாத்திட்டேன்
\\
Thanks :)
At Thursday, August 28, 2008 10:32:00 PM,
Divya said…
\\
ரம்யாவும் திவ்யாவும் சும்மா இருக்காங்கனு கேள்வி பட்டேன். சங்கிலியை தொடர அவங்கள அழைக்கிறேன்.\\
ada.....ennanga murugs ithu, ipdi maatti vituteenga:(
thinnai anubavam .......post eluthura alavuku ileengley,
enna panrathu??hmmm,
yosikirein murugs!!
[neengala matti viteengla.........illa YARU pechavathu kettu matti viteengla intha tag la??}
At Friday, August 29, 2008 2:19:00 PM,
Divyapriya said…
நல்லா இருக்கு உங்க திண்ணை அனுபவம்...
//ரம்யாவும் திவ்யாவும் சும்மா இருக்காங்கனு கேள்வி பட்டேன். சங்கிலியை தொடர அவங்கள அழைக்கிறேன்.//
ரெண்டு பேரும் அவங்க ப்ளாக update பண்ணி ரொம்ப நாள் ஆச்சு...நல்ல வேலை தான் :-))
At Friday, August 29, 2008 7:09:00 PM,
Hariks said…
//[neengala matti viteengla.........illa YARU pechavathu kettu matti viteengla intha tag la??}//
ungala yaarum maati vidala. Neengalum thinnaiya pathi ezhudhula. Enna dhaan naanga ezhudhanaalum ungala maadhiri kavidhaiya ezhudha mudiyaadhula :)
At Monday, March 09, 2009 6:33:00 PM,
Unknown said…
sorry andha stealer site is
http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html
divya... idhu ellam oru polappa unaku? aruvaruppa illai? manushiya nee?
frnds.. naan solavdhil nambikai illai endraal indha link click seidhu paarunga. anupama apdinu enudaiya frnd ezudhiya story thaan indha divya madam thirudi irukaanga. adhuvum including the title too. vetkama illai?
http://amutha.wordpress.com/2008/04/30/anupamas-story-kannukkulle-unnai-vaithen/
Post a Comment
<< Home