Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Monday, July 28, 2008

இதெல்லாம் ஒரு க‌தையா?


க‌ட‌ல‌ போட‌ற‌துக்கு ஒரு பொண்ணு இல்லையேனு ந‌ம்ம‌ பைய‌ன் ப‌டிக்கும் போதே த‌ன்னோட‌ ஏக்க‌த்த‌ ஸ்டார்ட் ப‌ண்ணா, அவ‌னுக்கு அதுக்கு மேல‌ ஒரு கொடுமை ந‌ட‌க்குது க‌ல்யாண‌ வ‌ய‌சுல‌ ;)

வ‌ய‌சு தான் ஆகிடுச்சே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ற‌யானு வீட்ல‌ கேட்டா, ம‌ன‌சுக்குள்ள‌ இத‌ கேக்க‌ற‌துக்கு இவ்வ‌ள‌வு நாளானு நினைச்சாலும், ந‌ம்ம‌ ப‌ய‌, "என்ன‌ம்மா அதுக்குள்ள‌ அவ‌ச‌ர‌ம். லெட் மீ என்சாய் மை பேச்சாலிரிட்டி"னு ஒரு மொக்க‌ இங்கிஷ்ல‌ த‌ன்க்கும் என்ன‌ சொன்ன‌னு புரியாம‌ கேட்ட‌வ‌ங்க‌ளுக்கும் என்ன‌ சொன்னானு புரியாம‌ ஏதாவ‌து உள‌ர‌ வேண்டிய‌து. அவ‌ங்க‌ளும் ந‌ம்ம‌ பைய‌ன‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்னு நினைச்சுகிட்டு உன் இஷ்ட‌ம்பானு சொல்லுவாங்க‌.

இவ‌ன் தன்னோட‌ ந‌ண்ப‌ர்க‌ள்கிட்ட‌ வ‌ந்து பொல‌ம்புவான். ஏண்டானு கேட்டா, "என்ன‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்னு சொல்லிடாங்க‌ ம‌ச்சி"னு வ‌டிவேல் க‌ண‌க்கா சொல்ல‌ வேண்டிய‌து. கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு பிற‌கு, தானும் எவ்வ‌ள‌வு நாள் தான் ந‌ல்ல‌வ‌ன் மாதிரியே ந‌டிக்கற‌துனு யோசிச்சுகிட்டு இருக்கும் போது, வீட்ல‌ ஒரு மெகா சீரிய‌ல்ல‌ ஹீரோவோட‌ க‌ல்யாண‌த்த‌ ப‌த்தி பேசிட்டு இருந்தா, அது த‌ன‌க்கு தான்னு நினைச்சு, "ச‌ரிம்மா! இதுக்கு மேல‌ உங்க‌ பேச்ச த‌ட்ட‌ விரும்ப‌ல‌. நான் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ற‌தா முடிவு ப‌ண்ணிட்டேனு" சொல்ல‌ அவ‌ங்க‌ளும் எதுவும் சொல்ல‌ முடியாம‌ த‌லைய‌ ஆட்டுவாங்க‌. அவ‌ங்க‌ளும் உன‌க்கு எந்த‌ மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டா, "உன‌க்கு எந்த‌ பொண்ண புடிக்குதோ, அந்த‌ பொண்ணை என‌க்கும் புடிக்கும்னு" ஒரு பிட்ட‌ திரும்ப‌வும் போடுவான். அதுக்கு அவ‌ங்க‌ அம்மா, "இப்ப நான் உன்ன‌ ந‌ல்ல‌வ‌ன்னு சொல்ல‌வே இல்லையேடா. எதுக்கு இந்த‌ அக்க‌ போரு"னு சொன்ன‌துக்கு அப்புற‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா சொல்லுவான். ப‌க்க‌த்துல‌ அக்காவோ, த‌ங்க‌ச்சியோ இருந்தா, "அம்மா ந‌ல்ல‌ வேலை என‌க்கு சீக்கிர‌மா க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌. நான் இவ‌னோட‌ அறுப‌தாம் க‌ல்யாண‌த்த‌ தான் பார்ப்பேன்னு" இவ‌னோட‌ எதிர்ப்பார்ப்புக‌ள‌ பார்த்து சொல்ல‌, பைய‌ன் கொஞ்ச‌ம் டென்ஷ‌ன் ஆவான்.

இதையெல்லாம் தாண்டி, பொண்ணு பார்க்க போவான் ந‌ம்ம‌ ம‌க்கா. அந்த‌ நேர‌ம் பார்த்து, பொண்ணு த‌ன‌க்கு முக்கிய‌மான‌ கிலைன்ட் மீட்டீங் இருக்குனு சொல்லி வ‌ராம‌ இருப்பா. பைய‌ன் இது தான் சாக்குனு, "ச‌ரி! ஒரு நாள் வெளிய‌ ச‌ந்திக்க‌லாம். பொண்ணுகிட்ட‌ பேசிட்டு தான் என்னோட‌ முடிவ‌ சொல்ல‌ முடியும்"னு சொல்லுவான். அவ‌ங்க‌ளும் அதுக்கு ஏற்பாடு ப‌ண்ணுவாங்க‌. பைய‌ன் இதுக்காக‌ லீவ் எல்லாம் போட்டு, த‌ன்னோட‌ யுனிவெர்சிட்டி ப‌ரிட்சிக்கு கூட‌ இப்ப‌டி ப்ரிபேர் ப‌ண்ணி இருக்க‌ மாட்டான், அந்த‌ அள‌வுக்கு யோசிப்பான்,‍ என்ன‌ பேச‌ற‌துனு. எல்லாம் கைகூடி, ச‌ந்திப்பும் ந‌ட‌க்கும். பைய‌னுக்கு ப‌ல்பு கொடுக்க‌ற‌ மாதிரி பொண்ணு முக‌ம் கொடுத்து பேச‌ மாட்டா. "ஒரு வேளை பொண்ணுக்கு ந‌ம்ம‌ள‌ புடிக்க‌ல‌யோ? இல்ல‌ வேற‌ யாரையாவ‌து புடிச்சிருக்கோ?. என்னையும் அர‌சிய‌ல் ப‌ண்ண‌ வ‌ச்சிட்டாங்க‌ளேனு", க‌வ‌லைய‌ கொஞ்ச‌ம் ஏத்திக்கிட்டு அத‌ ப‌த்தியே யோசிச்சுட்டு இருப்பான். வீட்ல‌ வேற‌ கேப்பாங்க‌ இத‌ ப‌த்தி. பைய‌ன் கொஞ்ச‌ம் ப்ரில்லிய‌ண்டா ஐடியா ப‌ண்ணி, "என‌க்கு இன்னொரு த‌ட‌வ‌ அந்த‌ பொண்ணு கூட‌ பேசினா தான் சொல்ல‌ முடியும். அந்த‌ பொண்ணு வாயால‌யே என்ன‌ புடிச்சிருக்குனு சொல்ல‌னும்"னு சொல்லுவான். ச‌ரின்னு ஏற்பாடு ப‌ண்ண‌லாம்னு பொண்ணுகிட்ட‌ கேட்டா..."இர‌ண்டு நாளைக்கு முன்னாடி தானே பேசினாங்க‌. அதுகுள்ள என்ன‌? க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டு அத‌ தானே ப‌ண்ண‌ போறார்னு" பொண்ணு சொன்னா, பைய‌னோட‌ ம‌ன‌சு என்ன‌ பாடு ப‌டும்? இந்த‌ கொடுமைய‌ தான் நான் ப‌திப்பின் முத‌ல் வ‌ரியில‌ சொல்லி இருக்கேன்.


இத‌ வ‌ந்து அவ‌ன் எங்க‌ கிட்ட‌ சொல்ல‌ எங்க‌ளோட‌ க‌ற்ப‌ன‌ குதிரைய‌ த‌ட்டி விட்டு அவ‌ன இப்ப‌டி தான் வெறுப்பேத்தினோம்.

"ம‌ச்சி! ஒரு வேளை க‌ல்யாண‌ம் நிச்சிய‌மாகிடுச்சுனு வை. க‌ல்யாண‌ புட‌வைய‌ எடுக்க‌லாம்னு கூப்பிட்டா. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌மும் அத‌ தானே செய்ய‌ போறீங்க‌னு வ‌ர‌ மாட்டேன்னு சொல்லிட்டா? ச‌ரி அத‌ விடு. க‌ல்யாண‌த்துக்கு முன்னாடி நாள் பேச‌லாம்னு கூப்பிட்டா, நாளைக்கு தான் க‌ல்யாண‌ம் ந‌ட‌க்க‌ போகுதுல‌. அப்புற‌ம் பாத்துக்க‌லாம்னு சொன்னா? ச‌ரி அதையும் விடு. முத‌ல் ராத்திரி அன்னைக்கு பேச‌லாம்னு சொன்னா. இனி அத‌ தானே ப‌ண்ண‌ போறோம். இன்னைக்கே ஸ்டார்ட் ப‌ண்ண‌னுமா? ப‌டுத்து தூங்க‌லாம்னு சொன்னா? ச‌ரி இதையும் விடு. அலுவ‌ல‌க‌ம் போய்ட்டு, ஆசையா கூப்பிட்டு பேசினா, இப்போ தான் வீட்ல‌ இருந்து போனீங்க‌, எதுவா இருந்தாலும் சாய‌ந்திர‌ம் பேச‌ கூடாதானு கேட்டா? குழ‌ந்தைய‌ சும‌ந்துகிட்டு இருக்கும் போது ஆசையா பேசினா, இவ்வ‌ள‌வு நாள் தான் பேசின‌ இப்ப‌வுமானு கேட்டா? குழ‌ந்தை பிற‌ந்த‌துக்கு அப்புற‌ம் பேசினா, ஒரு குழ‌ந்தையே பெத்தாச்சு இனிமே என்ன‌ பேச்சுனு கேட்டா? குழ‌ந்தை கொஞ்ச‌ம் பெருசான‌துக்கு அப்புற‌ம் பேசினா, பொண்ணு இவ்வ‌ள‌வு பெருசா ஆகிடுச்சு இன்னும் என்ன‌ பேச்சு வேண்டி கிட‌க்குனு கேட்டா? பொண்ணுக்கு க‌ல்யாண‌ வ‌ய‌சு வ‌ந்த‌துக்கு அப்புற‌ம் பேசினா, க‌ல்யாண‌ வ‌ய‌சுல‌ ஒரு பொண்ண‌ வ‌ச்சிகிட்டு இனி சாப்பிட‌ற‌துக்கு ம‌ட்டும் தான் அந்த‌ ஆளு வாய‌வே தொற‌க்க‌ணும்னு சொன்னா?" இப்ப‌டினு நாங்கா அடிக்கிட்டே போக‌, "டேய் என‌க்கு க‌ல்யாண‌ம் ஆக‌லானு கூட‌ ப‌ர‌வா இல்ல‌. நீங்க‌ கொஞ்ச‌ம் பேச்ச‌ குற‌ங்க‌டா"னு எங்க‌ள‌ பார்த்து குரைப்பான்‌. ஒரே ஒரு த‌க‌வ‌ல‌ ம‌ட்டும் சொல்லுனு நாங்க‌ கேட்டோம். "அந்த‌ பொண்ணோட‌ விலாச‌ம்? ;). ம‌ச்சி த‌ப்பா நினைக்காத‌டா. எங்க‌ வீட்ல‌ அதே பொண்ண‌ என‌க்கு பார்த்துட‌ கூடாதுல‌ அதான். ;)".

இதெல்லாம் ஒரு க‌தையா?

ப‌ச‌ங்களுக்கு இப்ப‌டி ந‌ட‌ந்துகிட்டு இருக்க‌ பொண்ணுங்க‌ளுக்கு எப்ப‌டி ந‌ட‌க்குதுனு தெரிய‌ல‌. எந்த‌ பொண்ணையும் கேக்க‌ற‌துக்கும் இல்ல‌. எந்த‌ பொண்ணாவ‌து இத‌ ப‌டிச்சா, எழுத‌ விருப்ப‌ம் இருந்தா, எழுதிட்டு என‌க்கும் கொஞ்ச‌ம் சொல்லுங்க‌. நானும் தெரிஞ்சிக்க‌றேன். :)

3 Comments:

  • At Sunday, August 03, 2008 3:49:00 AM, Blogger ஜியா said…

    அட... கலக்கலா எழுதிருக்கீங்க முருக்ஸ்.... ஆரம்பிச்ச உடனேயே என்ன நம்ம கத மாதிரியே இருக்குதுன்னு நெனச்சா.. நீங்க அதுக்குள்ள பொண்ணு பாக்குற லெவெலுக்கு போயிட்டீங்க.. ;))

    அடுத்த தடவ எங்கம்ம மெகா சீரியல பத்தி பேசாமையா போயிடுவாங்க... ;)))

    [word verificationa remove panneengannaa innum nalla irukkum :)))]

     
  • At Monday, August 04, 2008 10:15:00 AM, Blogger Hariks said…

    ந‌ன்றி'ங்க‌ ஜி.

    Word verification removed. :)

     
  • At Tuesday, August 26, 2008 2:28:00 AM, Blogger ஜியா said…

    Naan kooda nee vera etho puthu blogger thaan polirukuthunnu mariyaathai ellaam pottutten.. che.. mothalla poi mariyaathi koduththu type adicha kaiya soapu pottu kazuvanum.. :))

     

Post a Comment

<< Home