என்ன நடக்குது? பகுதி - 2
....அட பாவிங்கலா! என்னோட லேப்டாப்பையும், வச்சிருக்கிர பணத்தையும் எடுத்திட்டு மீதம் இருக்கிறத பார்த்தா 100 யுரோ கூட தேறாது. சரி என்ன பண்றது அதிகமா இருக்கிற வெயிட்ட எடுதிடறேன்னு சொல்லி வந்துட்டேன்.
அவங்கள போன் பண்ணி வர சொன்னேன். என்னட இது help பண்ணலாம்னு நினைச்சு இப்படி ஆகிடுச்சேனு நினைச்சேன். ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு அவர் வந்தார், ஹரிக்காவுடன். ஏன் இவளும் வரா?? மனதில் நினைத்து கொண்டேன். இதோ அங்கே நடந்தது.
நான்: வெயிட் அதிகமா இருக்குதுனு எடுத்துக மாட்றாங்க.
பிரியா: சும்மா காமெடி பண்ணாதீங்க.
நான்: நான் ஏங்க உங்க கிட்ட காமெடி பண்றேன்?
பிரியா: என்ன பா என்ன ஆச்சு? எவ்வளவு வெயிட் இருந்தது? (கவலையுடன்)
நான்: இல்லைங்க. வீட்ல பார்த்தத விட ரொம்ப அதிகமா இருக்குது. மொத்தமா 37 கிலோ இருக்கு. 2 கிலோ freeya எடுத்துகிறாங்களாம். 5 கிலோவுக்கு 180 யுரோ கேக்கறாங்க.
இதற்குள்ளாக அங்கு இருந்த அனைவரும் அவர்களுடைய check-in முடித்திருந்தார்கள்.
பிரியா: சரி இன்னொரு தடவை try பண்ணுவோம். Infosysnu சொல்லி பார்ப்போம். எடுத்துகுவாங்க.
நான்: Infosysa பத்தி இவங்களுக்கு எப்படி தெரிய போகுது? சரி பார்ப்போம்.
இப்பொழுது Economical Class linela போனேன். அங்கு ஒரு பெண் இருந்தாள். ஆங்கில படத்தில் இருக்கும் supporting actress கெத்தில் அவள் இருந்தாள். அவளும் அதே வெயிட்டை பார்த்தாள். ஒரு வார்த்தை கூட பேசாமல், check-in formalties முடித்தாள். Boarding Pass-ல் குறைந்த வெயிட் உள்ளதாகவே குறித்திருந்தாள். பிரியாவும் ஹரிக்காவும் பக்கதிலேயே இருந்தார்கள்.
நான்: என்ன நடக்குது இங்க? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே ??@@@####
பிரியா: எல்லாமே நல்லதது தானே நடக்குது. சும்மா இருங்களேன்.
எப்படியோ அவர்கள் வந்ததும் எல்லாமே சுபமாகவே முடிந்தது. இறுதியாக நாங்கள் மூவரும் காபி குடித்தோம். பிரியா நான் வேண்டுமென்றே தான் அவர்களை வர வைப்பதற்காக போன் பண்ணினேன் என்று நினைத்து கொண்டு பஸ்ஸில் வரும் போது பேசி கொண்டார்களாம். நல்ல வேலை வந்தார்களே!

0 Comments:
Post a Comment
<< Home