சங்கிலித் தொடர்ச்சி
ஒரு யோசனை, "Tagged" ஐ தமிழில் எழுதினால் எப்படி இருக்கும்? பிரதிபாவின் பதிப்பின் தொடர்ச்சியாக இதோ என்னுடைய பதிப்பு. "சங்கிலி தொடர்ச்சி" என்பது சரியான தமிழாக்கம் என்று நம்புகிறேன். தவறு இருந்தால் என்னை திருத்துங்கள்.

பிடித்த மூன்று வாசனைகள்:
1. மண் வாசனை (மழையை அடுத்து வரும் வாசனை)
2. தாமரை பூ
3. பெட்ரோல்
பிடிக்காத மூன்று வாசனைகள்:
மூக்க பொத்திகிறதால சரியா சொல்ல முடியல.
நான் இருந்திருக்கலாம் என்று நினைக்கும் மூன்று வேலைகள்:
1. இந்திய ஹிட்லர்
2. இந்திய பிரதம மந்திரி
3. இசை அமைப்பாளர்
பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற படங்கள்:
1. தில்லு முல்லு
2. லகான்
3. The National Treasure
மூன்று இனிமையான ஞாபகங்கள்:
1. அப்பா அம்மாவை வெளியே கூட்டி போனது
2. என்னுடைய பைக்கில் முதல் பையணம்
3. கல்லூரி நூலகம் வெளியே அரட்டை அடித்தது
மூன்று பிடித்தமான வேலைகள்:
1. தூங்குவது (அதுவே இப்ப ஒரு வேலையா ஆகிடுச்சு)
2. பஸ்ஸில் பயணம்
3. தொலைக்காட்சி பார்ப்பது
மூன்று பிடித்தமான உணவு வகைகள்:
1. அம்மாவின் மீன் குழம்பு
2. உருளைக் கிழங்கு பொறியல்
3. ஹைதராபாத் பிரியாணி
இருக்க நினைக்கும் மூன்று இடங்கள்:
1. என்னுடைய வீடு (புதுவை, இந்தியா)
2. அவளின் இதயம் ;)
3. ஹைதராபாத் மதினாகுடா
அழ வைக்கும் மூன்று விஷயங்கள்:
1. என்னுடைய அறியாமை
2. என்னுடைய ஏமாற்றங்கள்
3. படங்களில் வரும் Senti Scenes

1 Comments:
At Thursday, November 02, 2006 10:54:00 AM,
KP said…
இருக்க நினைக்கும் மூன்று இடங்கள்:
2. அவளின் இதயம் ;)
--pinnita raasa..
Post a Comment
<< Home