சிறு வயது கண்டுபிடிப்புகள்
எல்லாருமே சின்ன வயசுல சில ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள்னு நிறைய பண்ணியிருப்போம். அதை நினைத்தால் இப்பொழுது கூட சிரிப்பு வரும். எனக்கும் சில கண்டுபிடிப்புகள் இருக்கு. இதோ உங்கள் பார்வைக்கு சில. :)
1. முடி ஏன் வளருது? ஏன்னா நாம எண்ணை தடவரும் இல்ல. அதனால தான். :)
2. முடி வெட்டினா ஏன் வலிக்க மாட்டேங்குது?? ஏன்னா முடி எல்லாம் செத்து போன செல்ஸ். அதான் வலிக்க மாட்டேங்குது. இது ஒரு தடவ நகம் பத்தி ஒரு ஸைன்ஸ் புத்தகத்தில் படித்த போது உதித்த கண்டுபிடிப்பு.
3. Opposite of Ill is Wellnu என்னோட 3rd standard english miss கூட வாதம் பண்ணேன். :)
4. காயம் பட்டுச்சுனா காயம் பட்ட இடத்துல குளிர்ச்சியான தண்ணிய ஊத்தினா சீக்கிரம் ஆறி போயிடும். அதே போல தலை வலிக்கும் போது குளிர்ச்சியான் தண்ணிய ஊத்தினா சீக்கிரம் தலை வலி சரியா போயிடும். சரி தானே?
5. இதை எல்லாத்தையும் விட ஒரு மிக பெரிய கண்டுபிடிப்பு இது. ஏன் ஆப்பிரேஷன் தியேட்டரில் எல்லாரும் வாயை கட்டிகிட்டு இருக்காங்க? ஏன்னா..... நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து படுக்க வச்சிருப்பாங்க. ஆப்பிரேஷன் பண்ணும் போது அந்த இரத்தத்த பார்த்து யாராவது கத்தினாங்கனா அந்த சத்தத்தை கேட்டு நோயாளி ஆப்பிரேஷன் நடக்கும் போதே எழுந்திட்டா அவன் செத்து போயிடுவான். ஏன்னா மயக்கும் இருக்கும் போது வெட்டலாம் குத்தலாம். ஆனா அவங்க சுய நினைவோடு இருந்தா செய்ய முடியாது. இப்ப வாயை கட்டிகிட்டு இருந்தாங்கனா அவங்க கத்தினா கூட சத்தம் வெளிய அதிகமா வராது. அதனால் நோயாளியும் எழுந்திருக்க மாட்டான்.
இந்த அளவுக்கு யாராவது யோசிச்சு இருக்க முடியுமா? :)

3 Comments:
At Saturday, October 14, 2006 3:57:00 AM,
Peter Jayaraj said…
Itz very funny n cool..dude..nice thought though...
At Monday, October 16, 2006 2:05:00 PM,
Rams said…
sooperappu...enjoyed reading this!
At Monday, October 16, 2006 3:43:00 PM,
KP said…
5th one is ultimate
Post a Comment
<< Home