விகேவுக்கு பிறந்தநாள்!
அக்டோபர் 30 - கார்த்திகேயனின் (VK) பிறந்தநாள். போன வருடம் நடந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வரும்.
பொதுவாக என்னுடைய பிறந்தநாளின் போதும் விகேவின் பிறந்தநாளின் போதும் நாங்கள் புதுவையில் தான் இருப்போம். போன வருடம் (அக்டோபர் 29, 2005) தீபாவளிக்காக நாங்கள் புதுவைக்கு சென்றிந்தோம். அவனுடைய பிறந்தநாளை நானும் மெளலியும் சுத்தமாக மறந்துவிட்டோம். அக்டோபர் 30 அன்று முகுந்தன் புதுவைக்கு வந்திருந்தான். நான் அவனை அழைத்து கொண்டு விகேவின் வீட்டுக்கு சென்றேன் (just like that). போனால் அவன் கோயிலுக்கு போய் இருப்பதாக சொன்னார் அவன் அம்மா. நான் "பையனுக்கு என்ன ஆச்சு கோயிலுக்கு எல்லாம் போறான்". சிறிது நேரம் கழித்து அவன் வந்தான். நாங்கள் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி விட்டோம். மறுநாள் மெளலி என்னை தொலைபேசியில் அழைத்து "டேய் விகேவுக்கு நேற்று பிறந்தநாளா? இல்லை இன்னைக்கா?" என்று கேட்டான். அப்பொழுது தான் எங்களுக்கு ஞாபகம் வந்தது. அப்புறம் என்ன வழியர முகத்தோடு அவனைப் பார்த்து "Belated Wishes machi!"னு வாழ்த்தினோம்.
அந்த மாதிரி இந்த தடவை நடக்க இடம் கொடுக்காமல், அமெரிக்கா - அட்லாண்டாவில் (US) இருக்கும் விகேவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கார்த்தி! "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!"


1 Comments:
At Monday, October 30, 2006 10:36:00 AM,
Karthigeyan said…
thanx da
Post a Comment
<< Home