நானும் ஆன்ஸைட் பார்த்துட்டேன்
என்னடா எல்லாரும் ஆன்ஸைட் ஆன்ஸைடு சொல்றாங்களே அப்படி என்ன தான் இருக்குனு போய் பார்த்துடலாம்னு நானும் கிளம்பினேன். நல்லா இருந்ததுபா. வெதர் சூப்பரா இருந்தது. ஆனா விலை வாசி தான் கொஞ்சம் இல்ல இல்ல அதிகமாகவே அதிகமா இருந்தது.

பின்குறிப்பு: Conversion Rate 1 யுரோ = 60 ரூபாய்
1. இது தான் பெஸ்ட் - ஒரு வாழை பழம் 1 யுரோ. நம்ம ஊரு பணத்துல கிட்டதட்ட 60 ரூபாய். 60 ரூபாய்க்கு ஒரு பலா பழமே வாங்கலாமே எங்க ஊர்ல.
2. முடி வெட்டறதுக்கு ரொம்ப கம்மி - 15 யுரோஸ் (900 ரூபாய்) தான். நம்ம ஊர்ல மாப்பிளைக்கு பேஸியல் பண்ணவே அவ்வளவு தானே ஆகும். இதுல நாங்க கொஞ்சம் சீப்பா முடிச்சுட்டோம். நிறைய பேர் 35 யுரோஸ்கெல்லாம் வெட்டி இருக்காங்க.
3. சினிமா பார்த்தோம் - அங்க ப்ளாக் எல்லாம் இல்ல. டிக்கெட் விலை - 9 யுரோஸ் (560 ரூபாய்)
4. ஒரு சின்ன அருங்காட்சியகத்துக்கு என்ட்றிக்கு டிக்கெட் விலை வெறும் 12 யுரோஸ் (720 ரூபாய்) தான்.
அதானால ஆன்ஸைட் போனீங்கனா Money Conversion கூடாது.

3 Comments:
At Wednesday, January 24, 2007 3:42:00 PM,
Unknown said…
nee evlo euro vangura..kanaku potu paaru sariya than irukum :p
At Friday, January 26, 2007 6:26:00 AM,
ஜி said…
மச்சி... அப்டீயே உன் சம்பளத்தையும் சொல்லணும்ல...
At Monday, January 29, 2007 1:13:00 PM,
Kishore said…
தம்பி அது இந்தியன் மென்டாலிடி எதையும் ருபாய் கு மாத்தி தான் பார்க்கும். அது யாராக இருந்தாலும் அதை தான் பண்ணுவாங்க...
Post a Comment
<< Home