Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Sunday, November 26, 2006

அழகிய ஆப்பிள் ஐ-பாட் - Apple iPod

என்ன வாங்கின? என்ன வாங்கின?னு எல்லாரும் கேட்டு என்னை யோசிக்க வச்சு இப்ப ஒரு ஆப்பிள் ஐ-பாட் வாங்க வச்சுட்டாங்க. ஐ-பாட் நான் வாங்குவேன்னு நினைச்சு கூட பார்க்கல. திடிர்னு ஒரு தள்ளுபடி. பெரிசா ஒன்னும் இல்லை. ஒரு 45 யுரோ குறைவா கொடுக்கிறாங்க. கேட்டு பார்த்ததில் இந்தியாவில் வாங்குவதோடு ஒரு இரண்டு ஆயிரம் குறைவு தான் என்று தெரிந்தது. சரி போய் வாங்கிட வேண்டியது தான்னு வாங்கிட்டேன்.


வாங்கினதுக்கு அப்புறம் அதை எப்படி உபயோகிப்பதுனு தெரியல. ஒரு பாட்ட அதுல போட்டு கேக்கறதுக்கு எனக்கு ஆன நேரம் 20 நிமிடங்கள். நான் முதல் முதலில் என்னுடைய Brand New Apple video iPod 30GB Black இல் கேட்ட பாடல் தலைவர் ஏ ஆர் ரஹ்மான் இசைத்த "முன்பே வா என் அன்பே" (சில்லுனு ஒரு காதல்) பாடல் தான். இன்னும் எந்த வீடியோவும் பார்க்கவில்லை. இதோ என்னுடைய ஐ-பாட் உங்களுடைய பார்வைக்காக.

0 Comments:

Post a Comment

<< Home