Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Thursday, January 04, 2007

நான் எதிர்பாராதது....கிடைக்குமா?


(Harika) ஹரிக்கா - ஆங்கிலத்தில் "Wonderful" என்று அர்த்தம். உண்மையிலெயே அவள் அற்புதவமானவள் தான். எல்லா பொண்ணுங்களுமே மொல்லையாக தான் இருப்பார்கள் என்ற என் எண்ண்த்தை மாற்றியவள். ஹரிக்காவை நான் Amsterdamil தான் சந்தித்தேன். அவளும் இன்போஸிஸ் தான். அவளுடன் என்னுடைய மேனேஜரும் தங்கி இருந்ததால் நாங்கள் ஒவ்வொரு வார விடுமுறையிலும் வெளியே சுற்றுவோம். நாங்க பசங்க நாலு பேரு அவங்க பொண்ணுங்க ரெண்டு அல்லது மூன்று பேர் வருவாங்க.

ஹரிக்க அதிகமா பேச மாட்டாள். அவளை பேச வைப்பதே என்னுடைய வேலையா இருந்தது. சில சந்திப்புகளிலேயே அவள் என்னுடன் நன்றாக பேச ஆரம்பித்தாள். எனக்கும் அவளிடம் பேச பிடித்திருந்தது (கடலை போட கசக்குமா என்ன? ;)). முன்பு சொன்னது போல அவள் ரொம்ப Innocent. நானும் முதலில் அவள் நடிக்கிறாள் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் பழகிய பிறகு தான் தெரிந்ததது அவள் உண்மையிலெயே Innocent என்று. அவள் அதை ஒத்து கொள்ள மாட்டாள்.

ஹரிக்கா எனக்கு மிகவும் நெருக்கமானாள் (நான் அப்படி நினைத்து கொண்டேன் ;). தினமும் நான் என்ன பண்றேனோ இல்லையோ அவளிடம் Gmailலில் Chat பண்ணுவேன். அவளும் என்னக்காவே Gmailலில் Login செய்வாள் (இதுவும் நானே நினைத்துக் கொண்டது). அவளிடம் சற்று அதிகமாகவே பேசியது போன்ற உணர்வு. நான் இந்தியாவிற்கு திரும்பும் வாரத்தில் ஒரு நாள் என்னை அவளை பார்த்துப் போகச் சொல்லியிருந்தாள். நானும் போவதற்கு முன்றைய தினம் அவளை சந்திப்பதற்காக அவளுடைய வீட்டீன் வெளியே காத்திருந்தேன்.

அவள் வரும்போது ஒரு பையுடன் வந்தாள். என் கையில் கொடுத்து "இது உங்களுக்கு!" என்றாள். அது கொஞ்சம் பெரியதாக தான் இருந்தது. அதில் அழகிய Photo Frame & Designed Candels இருந்தன. "எதுக்கு இது?" என்று நான் கேட்க அதற்கு அவள் "சும்மா....!" என்று அன்த குழந்தைச் சிரிப்புடன் சொன்னாள். பிறகு நாங்கள் இருவரும் வெளியே சென்றோம். திரும்பி வரும் போது "இதுக்கு தான் என்னை கண்டிப்பா மீட் பண்ணணும்னு சொன்னியா?" என்றேன். அதற்கு அவள் "ஆமாம்" என்றாள். "நான் வேற எதுக்கோனு இல்ல நினைச்சேன்" மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டேன் ;).

இதை நான் சற்றும் எதிர் பார்க்காதது. ஆனாள் மிகவும் பிடித்திருந்தது. இது போல் திரும்பவும் நடக்குமா? I do not know :)



3 Comments:

  • At Friday, January 05, 2007 9:45:00 PM, Blogger iamchandru said…

    enna da enna oru velli mudhal velli arambichitya?

     
  • At Tuesday, January 09, 2007 10:15:00 AM, Blogger ஜி said…

    டேய்.. எத்தன பொண்ணுக்கூடடா உன்னுடைய லீலைகளை காட்டுவ... இன்ஃபி ட்ரெய்னிங்ல இருந்து உனக்கு இதே வேலையா போச்சு..

    நான் யாருன்னு யோசிக்கிறியா?

    ஹி...ஹி... கண்டுபுடி பாப்போம்..

     
  • At Tuesday, January 09, 2007 10:16:00 AM, Blogger ஜி said…

    indiya poyittiyaa?
    sollave illa

     

Post a Comment

<< Home