Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Tuesday, May 23, 2006

பாராளமன்றம் - இது என்னோட ஸ்டைல்


இன்றைக்கு ஒரு மின் அஞ்சலில் நம்முடைய பாராளமன்ற சண்டையை பார்த்தேன். ஒரு பாராளமன்ற நாளுக்கு பல லட்சங்கள் செலவாகும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இவர்கள் அங்கிருக்கும் மைகுகள், அமர்க்கைகளை வைத்து சண்டை போடுகிறார்கள். இதோ இப்பொழுது ஜேசன் போர்னேவாக மாறுகிறேன்.

குறிப்பு: ஜேசன் போர்னே - Hero of "The Bourne Identity" english movie
பிரதமர் நம்ம ஆள். இன்னைக்கு பாராளமன்றம் கூடுகிறது. எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பை பிரதமர் கொடுத்திருக்கார். எவன் எவன் ரகளை பண்றானோ அவனை எல்லாம் போட்டு தள்றதுனு. இத வச்சு தான் எனக்கு இந்த appraisal நடக்கும்.

மன்றம் கூடியது. எல்லாரும் வந்துட்டாங்க. தலைவரும் வந்துட்டாரு. ஆரம்பிச்சுடுச்சு. ஒருத்தன் முதல்ல எழுந்து மன்ற தலைவர் முன்னே போய் நின்று கத்தறான். தலைவர் அமைதியா போய் உட்கார சொல்றார். ஆனால் அவன் கேக்க மாட்றான். அவனை பார்த்துட்டு நிறைய பேர் எழுந்திருகிறானுங்க. எல்லாரும் முன்னாடி போய் கத்தறானுங்க. வாய் பேச்சு மெதுவா கை கலப்பா மாறுது.

மறைந்திருந்த என்னை பார்த்து பிரதமர் கண் அசைக்கிறார். நான் அவரை கண்டு கொள்ளவில்லை. கை கலப்பை ரசித்து கொண்டிருந்தேன். சேதம் கொஞ்சம் அதிகமானது. இரத்தம் பெறுகியது. என்னுடைய சைலஸர் பொறுத்த பட்ட துப்பக்கியை எடுத்தேன். ஒருத்தன் ஒருத்தனா சுட்டேன். கலவரம் அதிகம் ஆனதால யாரும் யாரையும் கவனிக்க வில்லை. ஒரு இருபது பேரை சுட்டு தள்ளியதும் ஒருத்தன் இன்னொருவன் குண்டடி பட்டு இறப்பதை பார்க்கிறான். அவன் யாரோ ஒரு காவல் அதிகாரியிடம் போய் சொல்கிறான். அவர் கேட்கிற நிலைமையில் இல்லை. ஏனென்றால் அவரை அவன் தான் அதற்கு முன்பு அடித்தான். அவன் திரும்பியதும் அவனும் சாகிறான் என்னோட குண்டடி பட்டு. இப்படியாக எனக்கு கொடுத்த லிஸ்டில் ஒருவரை கூட மிச்சம் வைக்காமல் காலி பண்ணிவிட்டேன். கொடுத்த வேலைக்கு மேல கூவன தான் ரேட்டிங் நல்லா கிடைக்கும்னு நினைத்ததால ரகளை பண்ண லிஸ்ட்ல இல்லாத சில பேரையும் முடித்தேன்.

சாதரணமாக ஆம்புலன்ஸ் அடி பட்டவர்களை ஏற்றி செல்ல வரும். ஆனால் இன்று பிணங்களை ஏற்றி செல்ல வந்தது. யாரும் பேச கூட இல்லை. எல்லாரும் எப்போது வெளியே செல்வோம் என்று இருந்தார்கள். யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. யாரு செய்தார்கள் என்று தெரியவில்லை. எல்லாரும் தலைவரிடம் கொடுக்கப்பட்ட ஒரு செய்தியை மட்டும் அறிந்திருந்தார்கள். இந்த போர்னே எங்கெல்லாம் இந்த மாதிரி கேவலமாக அரசியலில் சண்டை போடுகிறார்களோ அங்கெல்லாம் அவதரிப்பான் என்று.

இது முடிந்த பிறகு எதிர் கட்சி ஒரு கூட்டம் கூட்டி எப்படி கட்சியில் ஆட்களை சேர்ப்பது என்று ஆலோசனை நடத்துகிறது. பிரதமர் ஒரு இரகசிய கூட்டம் கூட்டி "The Mission Failed" என்று அறிவிக்கிறார். அவர் கொடுத்த விளக்கம் நான் ரொம்ப கூவிட்டேன். என்னுடைய Appraisal காலி. ஆனால் பரவாயில்லை கொஞ்சம் அழுக்குகளை நீக்கினேன் என்ற நிறைவோடு வெளியேறினேன். கனவும் கலைந்தது.

2 Comments:

Post a Comment

<< Home