Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Thursday, August 28, 2008

ம‌துரை மீனாட்சி ‍- 2

ம‌துரை மீனாட்சி ‍- 1

இன்னைக்கு அவ‌ள் ப‌க்க‌த்துல‌ போய் உட்கார்ந்துட‌னும். ப‌ஸ் வ‌ந்த‌து...

எப்பொழுதும் அவ‌ள் தான் ப‌ஸ் ஏறுவ‌தற்கு முன் நிற்பாள். அன்றும், முத‌லில் ஏறி முன் இருக்கையிலேயே அம‌ர்ந்தாள்.

"அட‌டா! என்ன‌ப்பா இது? இது தான் க‌டைசி ஸ்டாப். எவ‌ன்டா முன்னாடி சீட்ட‌ சும்மா விட்டு பின்னாடி போய் உட்கார்ந்த‌து. மீட்டிங், செஸ்ஸ‌ன்`னா தான் பின்னாடி போய் உட்கார‌ரிங்க‌. இங்க‌யுமா? இனிமே எல்லாருக்கும் ஸீட் ந‌ம்ப‌ரையும் ப‌ஸ் பாஸ்ல‌ குடுக்க‌னும்"

"ச‌ரி இன்னைக்கு மிஸ் ஆகிடுச்சு நாளைக்கு பார்த்துக‌லாம். சாய‌ந்திர‌ம் வ‌ரும் போது கூட‌ ட்ரை ப‌ண்ண‌லாம், ஆனா எத்த‌ன‌ ம‌ணி ப‌ஸ்னு தெரிய‌ல‌. ஆமா இத‌ எல்லாம் யோசிக்கிற‌னே க‌டைசியில‌ அவ‌ ஆந்திராவா இருந்தா? சீச்சீ, அப்ப‌டி எல்லாம் இருக்காது. பாஸிடிவ்வா யோசிப்போம்."

அன்று சென்னையில் உள்ள‌ ப்ராஜ‌க்ட் ம‌க்க‌ளை ச‌ந்தித்து வேலைக‌ள் தொட‌ங்கின‌. ப்ராஜ‌க்டில் ச‌ரிகா என்று ஒரு பெண் இருந்தாள். ம‌ற்ற‌வ‌ர்க‌ளை க‌லாய்ப்ப‌தில் அவ‌ளை வென்றுவிட‌ முடியாது. மேனேஜ‌ர் கூட‌ கொஞ்ச‌ம் அவ‌ளுக்கு பய‌ந்து தான் போயிருந்தார்.

ச‌ரிகா! அந்த‌ ர்ர்ர்ர் பார்த்துட்டு கோட் ப‌ண்ணிட்டீங்க‌ளா? (எதுக்கும் கொஞ்ச‌ம் சாக்கிற‌த‌யா தான் இருக்க‌னும் இவ‌கிட்ட‌).

இல்ல‌ சிவா. ஒரு ப்ராப்ள‌ம் வ‌ருது. ரொம்ப‌ நேர‌மா ட்ரை ப‌ண்ணிட்டு இருக்கேன் ப‌ட் வ‌ர‌ மாட்டேங்குது. கொஞ்ச‌ம் ஹெல்ப் ப‌ண்ணுங்க‌ளேன்.

ச‌ரி நான் பார்க்க‌றேன். எப்ப‌வும் போல‌ ஒரு யு ட‌ர்ன் போட்டு லெஃப்ட்ல‌ க‌ட் ப‌ண்ணி ரைட்ல‌ போய் ஷாட் க‌ட்ல‌ ப்ராப்ப‌ல‌த‌ முடிச்சா ம‌ணி ரெண்டு ஆகிடுச்சு.

சிவா! ல‌ன்ச் வ‌ரீங்க‌ளா?
(போலாமா?) ச‌ரி! என‌க்கும் இங்க‌ யாரையும் தெரியாது. த‌னியா தான் போக‌னும். அதுக்கு இவ‌ கூட‌வே போலாம். "வ‌ர‌னே".

நான் டைம்கு ஏத்த‌ மாதிரி யாரு கூட‌ வேணும்னாலும் போவேன். எப்ப‌டியும் உங்க‌ளுக்கு இங்க‌ யாரையும் தெரியாதுனு என‌க்கு தெரியும். நீங்க‌ இங்க‌ இருந்து போகிற‌ வ‌ரைக்கும் நானே உங்க‌ளுக்கு க‌ம்பெனி த‌ரேன் உங்க‌ளுக்கு ஓகேனா.

அட‌ உன‌க்கு.... சாரி உங்க‌ளுக்கு இப்ப‌டி கூட‌ பேச‌ தெரியுமா? டீம்ல‌ எல்லாரும் உங்க‌ள‌ பார்த்து ப‌ய‌ப‌ட‌ராங்க‌.

அது என்ன‌ "உங்க‌ளுக்கு", "உன‌க்கு"னே சொல்ல‌லாம். என்னைப் பார்த்து யாரும் ப‌ய‌ப‌ட‌ல‌. யாரோ த‌ப்பா கிள‌ப்பி விட்டிருக்காங்க‌.

மே பி. ப‌ர‌வாயில்லை. ந‌ல்ல‌ பொண்ணா தான் தெரியுர‌.

அத‌ற்கு பிற‌கு, சாட், காபி ப்ரேக் என்று இனிமையாக‌வே க‌ழிந்த‌து ஒரு மாத‌ம். ஆனால் ப‌ஸ்ஸில் ப‌ய‌ண‌ம் செய்யும் தேவ‌தை அவ‌ன் நினைவிலேயே இருந்தாள்.

சில‌ முறை அவ‌ன் இவ‌ளை கூர்மையாய்ப் பார்ப்ப‌தை அவ‌ளும் க‌வ‌னித்தாள். அமைதியாய்
இருக்க‌மாய் இருந்த‌ அவ‌ள் முக‌ம் ம‌ல‌ர‌த் தொட‌ங்கிய‌து. எப்பொழுதும் த‌ரையையே பார்த்துக் கொண்டிருந்த‌ அவ‌ள் க‌ண்க‌ள் இந்த‌ உல‌கை பார்க்க‌த் தொட‌ங்கிய‌து. அவ‌ள் உல‌காய்ப் பார்த்த‌து சிவாவை தான் பெய‌ர் தெரியாம‌ல்.

ப‌ஸ் ஏரினான். எங்க‌ முன்னாடி ஸீட்ல‌ அவ‌ள‌ காணோம்? என‌க்கு முன்னாடி ஏறினாளே! பின் புற‌த்திற்கு ந‌க‌ர்ந்தான். அங்கே அவ‌ள் மூன்று இருக்கைய‌ர் ஸீட்டில் அம‌ர்ந்திருந்தாள். அவ‌ன் வ‌ருவ‌தைப் பார்த்த‌தும் த‌ன்னுடைய‌ ப‌ர்ஸை எடுத்து அவ‌னுக்கு இட‌ம் கொடுத்தாள்.

இது தான்ய‌ ந‌ல்ல‌ டைம். உட்கார்ந்துட‌ வேண்டிய‌து தான். ச‌ரி பேரை எப்ப‌டி தெரிஞ்சிக்கிற‌து? ம்ம்ம் அட‌ ஐடி கார்ட் மாட்டி இருக்கா. பார்க்க‌லாம். எப்ப‌டி எப்ப‌டியோ பார்க்க‌ ட்ரை ப‌ண்றான் முழு பேரை பார்க்க‌ முடிய‌ல‌. அவ‌ள் ம‌ட்டும் என்ன‌ சும்மாவா? இவ‌ன் ஐடி கார்டை பார்க்கிறான் என்ற‌ தெரிந்த‌வுட‌ன் ஒரு ந‌ம‌ட்டுச் சிரிப்புட‌ன் அதை கையில் எடுத்து விளையாட‌ ஆர‌ம்பித்தாள். அரைம‌ணி நேர‌ போராட்ட‌ம் பிற‌கும் அரைகுறையாய் ஆங்கில‌ எழுத்துக்க‌ளை ம‌ட்டுமே பார்க்க‌ முடிந்த‌து. ம்ல் தொட‌ங்கி ஹெச் இருந்த‌து ஐல் முடிந்த‌து. கொஞ்ச‌ம் பேரு பெருசா தான் இருக்கு. என்ன‌வா இருக்கும் என்று த‌ன்னுடைய‌ டெஸ்க் வ‌ரும் வ‌ரை யோசித்தான். த‌ன்னுடைய‌ மெய்ல் பாக்ஸை பார்த்தான்.

ஐடியா! சென்னை குருப் மெய்ல் ஐடி`ய‌ பொர‌ட்டி போட்டா தெரிஞ்சிட‌ போகுது. என்ன‌மா யோசிக்க‌றேன். நீ இன்னும் இன்பில இருக்க‌னுமா? ச‌ரி ச‌ரி வேலையைப் பார்ப்போம். அவ‌ன் பார்த்த‌ எழுத்துக்க‌ளின் காம்பினேஷ‌னில் நிறைய‌ பெய‌ர்க‌ள் இருந்த‌ன‌. அவ‌ள் பில்டிங் 6 போவ‌தை பார்த்திருந்தான். அதை வைத்து பில்ட‌ர் செய்தால் எந்த‌ பெய‌ரும் அந்த‌ காம்பினேஷ‌னில் வ‌ர‌வில்லை. ச‌ரி ந‌ம‌க்கு இன்பியே அதிக‌ம் தான். செய்யும் தொழிலே தெய்வ‌ம். செய்யும் இட‌மே கோவில்.

அன்றும் ச‌ரிகாவுட‌ன் காபி குடிக்க‌ சென்றான். ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் அவ‌ள் "அண்ணா" என்று அழுத்த‌ம் திருத்த‌மாக‌ சிவாவை குறிப்பிட்டாள். இதைக் கேட்ட‌தும் அவ‌ன் முக‌ம் வெகுவாக‌ வாடிப் போன‌து...

நா ஏதாவ‌து த‌ப்பா சொல்லிடேனா?

ஆமாம் :(

(தொட‌ரும்)

ம‌துரை மீனாட்சி ‍- 3

ம‌துரை மீனாட்சி ‍- 4

5 Comments:

  • At Thursday, August 28, 2008 8:16:00 PM, Blogger ஜியா said…

    ennaathu Annanaa?? Y this murder veri???

    kathai nalla poi kittu irukkuthu maappi.. aduththa partukaaga waiting... :))

     
  • At Thursday, August 28, 2008 10:03:00 PM, Blogger Ramya Ramani said…

    \\ச‌ரி நான் பார்க்க‌றேன். எப்ப‌வும் போல‌ ஒரு யு ட‌ர்ன் போட்டு லெஃப்ட்ல‌ க‌ட் ப‌ண்ணி ரைட்ல‌ போய் ஷாட் க‌ட்ல‌ ப்ராப்ப‌ல‌த‌ முடிச்சா ம‌ணி ரெண்டு ஆகிடுச்சு.
    \\
    ha ha unmaiya ippadi solla koodathu sir :)

    adade kadaisila "annava" akkam pakkam vera yarayachchum kuupitangala??

     
  • At Thursday, August 28, 2008 10:40:00 PM, Blogger Divya said…

    கதை நல்லா இருக்கு :)))

    \\அமைதியாய்
    இருக்க‌மாய் இருந்த‌ அவ‌ள் முக‌ம் ம‌ல‌ர‌த் தொட‌ங்கிய‌து. எப்பொழுதும் த‌ரையையே பார்த்துக் கொண்டிருந்த‌ அவ‌ள் க‌ண்க‌ள் இந்த‌ உல‌கை பார்க்க‌த் தொட‌ங்கிய‌து. \\

    இந்த வரிகள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு murugs!!!

    waiting for the next part......

     
  • At Friday, August 29, 2008 2:26:00 PM, Blogger Divyapriya said…

    //ஆந்திராவா இருந்தா? சீச்சீ, அப்படி எல்லாம் இருக்காது//

    ஏன் ஆந்திரா பொண்ணுங்க மேல இவ்ளோ கடுப்பு ;-)

    கதை நல்லா போகுது, ரெண்டு பொண்ணையும் ஒரே நேரத்துல ட்ரை பண்றாரே நம்ம ஹீரொ? அது மட்டும் புரியல :-(
    அடுத்த பார்ட் எப்போ?

     
  • At Friday, August 29, 2008 2:42:00 PM, Blogger Hariks said…

    //ஏன் ஆந்திரா பொண்ணுங்க மேல இவ்ளோ கடுப்பு ;-) //

    "என்ன‌ தான் நாம வேற‌ மொழில‌ பேசினாலும் ந‌ம்ம‌ தாய் மொழில‌ பேச‌ர‌ மாதிரி வ‌ராதுடா. அதுவும் த‌மிழ்ல‌ பேச‌ர‌ மாதிரி வ‌ராதுடா"

    நீங்க‌ முத‌ல் ப‌குதியில‌ இருக்கிற‌ இந்த‌ வாக்கிய‌த்தை ம‌ற‌ந்து போய் இருப்பீர்க‌ள். அனைத்துப் பெண்க‌ளும் உய‌ர்ந்த‌வ‌ர்க‌ளே.

     

Post a Comment

<< Home