Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Sunday, October 01, 2006

வெள்ளி முதல் வெள்ளி வரை....


வெள்ளி:
ஒரு வழியாக நெதர்லேந்தில் settle ஆனேன். என்னுடைய பிராஜக்ட் மேனேஜர் தினமும் காலையில் சீக்கரம் வருமாறு கூறியிருந்தார். ஆனால் அன்று (வெள்ளி கிழமை) என்னுடைய நண்பர்கள் வரவிருந்தால், அவர்களை ஏர்போர்டிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். மணி 9:30ஐ நெருங்கியிருந்தது. நாங்கள் அனைவரும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தோம் . அப்பொழுது தான் அவளை பார்த்தேன். அவளும் பஸ்ஸுக்கு தான் காத்திருந்தாள். மிகவும் கலையான முகம். பார்த்தவுடனேயே எனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது. நான் அவளை பார்த்ததை அவளும் கவனித்தாள். அவளுடைய தோற்றம் அவள் ஒரு இந்தியனா/ளாக தான் இருக்க வேண்டும் என்று இருந்தது.

பஸ்ஸில் பயணம் செய்தோம். நாங்கள் போகின்ற வழியிலேயே தான் அவளும் வந்தாள். நாங்கள் பஸ் பாஸ் வாங்க வேண்டியிருந்ததாள் அவள் எங்கு சென்றாள் என்று தெரியவில்லை. அவள் அன்று ரெட் டீ-ஷர்டும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்ததால் அவள் வேறொரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறவள் என்று நினைத்து கொண்டேன். அன்று மாலை திரும்பி வருகையில் என்னுடைய ரூம் நண்பர்களிடம் அவளை பற்றி சொன்னேன். அவளை மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னேன். சொல்லி முடித்தவுடன் பார்த்தாள் அவளும் அதே பஸ்ஸில் ஏறினாள். அவளுடன் வேலை செய்கிறவர்களோடு வந்தாள். அவர்களிடம் அவள் ஹிந்தியில் பேசியதால் அவள் வட நாட்டைச் சேர்ந்தவள் என்று நொந்து கொண்டேன். :) என்னுடைய நண்பர்கள் அவள் சுமாராக தான் இருக்கிறாள் என்று சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை அவள் மிகவும் அழகு. என்ன பிடித்திருந்தாலும் அவள் தமிழ் பெண்ணில்லையே :(. என்னதான் நாம் வேற்று மொழியிருடன் அவர்களுக்கு புரிகின்ற மொழியில் பேசினாலும் நம்முடைய தாய்மொழியில் பேசினால் தான் ஒரு மன நிறைவுடன் இருக்கும். மற்றவருக்கு எப்படியோ எனக்கு இப்படி தான். எனக்கு நிறைய வேற்று மொழி நண்பர்கள் இருக்கிறார்கள். என்னதான் அவர்களுடன் பேசினாலும் தமிழ் நண்பர்களுடன் பேசுவது போல் வராது. என்னுடைய காதலி/மனைவி கண்டிப்பாக ஒரு தமிழ் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. வீட்டுக்கு வந்தவுடன் கடைக்கு போய் காய்கறி வாங்க கிளம்பினோம். அங்கும் அவளை பார்த்தேன். ஒரு இன்ப அதிர்ச்சி - அவள் தமிழில் பேசி கொண்டிருந்தாள். அதுவும் என்னுடன் வேலை பார்க்கும் பெண்களிடம். அன்று மாலை அங்கேயே நேரத்தை கழித்து இரவு தான் என் வீட்டிற்கு கிளம்பினேன். அப்பொழுதும் அவளை பார்க்க நேர்ந்தது. கடவுள் உண்மையிலேயே தான் ஏதோ சொல்கிறாரோ - பிடித்து கொள் ;).

சனி & ஞாயிறு:
அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையில் கழிந்தன.

திங்கள்:
திங்கட் கிழமை வேலைக்கு கிளம்பினேன். ஆனால் அன்று அவளை காலை பார்க்க முடியவில்லை. அன்று மதியம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவளை பற்றி பேசி கொண்டிருக்கையில் மறுபடியும் அவளை பார்த்தேன். அன்று சாயந்திரமும் வீட்டுக்கு வருகையில் மறுபடியும் பார்த்தேன். என்ன நடக்கிறது என்று எனக்கே குழப்பமாக இருந்தது. Because it does not look like co-incidence. அன்று ஒரு முடிவு செய்தேன். ஏன் அவளிடம் நம்முடைய விருப்பத்தை தெரிவிக்க கூடாது என்று? அவளுக்கு விருப்பம் என்றால் சரி. இல்லையென்றாலும் சரி.

செவ்வாய்:
இதற்கு இடையில் என்னுடைய ரூம் நண்பர்கள் இதைப் பற்றி அதிகமாக பேச ஆரம்பித்தார்கள் (fresh out of college - இன்னும் வளரல). அவர்களுடைய பேச்சை நிறுத்த ஒரு பொய் மின்னஞ்சலையை அனுப்பினேன். அதில் நான் அவளை சந்தித்து என்னுடைய விருப்பத்தை தெரிவித்ததாகவும் அவள் மறுத்துவிட்டதாகவும் சொன்னேன். அவர்களும் நம்பி விட்டார்கள். அவளை பார்த்து பேச முடியவில்லையே என்று கவலையாக இருந்தது. பின்பு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. (அவள் பெயரை சொல்ல கூடாது. அதனால் அவளை 'க்க்க்க்' எனறு அழைக்கிறேன்.) க்க்க்க் அன்று மார்கெட்டில் என்னுடன் வேலை பார்க்கும் ச்ச்ச்ச் உடன் பேசிக் கொண்டிருந்தாள். ச்ச்ச்ச் உம் தமிழ் தான். அவளிடம் போய் க்க்க்க் ஐ எப்படி காண்டாக்ட் செய்வது என்று கேட்கலாம் என்று சென்றேன்.

இது தான் நான் ச்ச்ச்ச் இடம் பேசியது. பொண்ணுங்க இங்கிலிஷில் தான் அதிகமாக பேசராங்க...
Me: Hi, I want to talk to you for sometime.
She: Yeah. Tell me.
Me: Can we go outside and talk?
She: ok.
Me: நீங்க ச்ச்ச்ச் தானே.
She: ஆமாம் :)
Me: நீங்க தமிழ் தானே? :)
She: ஆமாம். :) (oru confirmationkaaga thaan)
Me: You were with a girl in the market last friday. You remember?
She: யாரு?
Me: She is from TCS. I remember all the other were from Infosys except her.
She: Yeah. She is "க்க்க்க்". She is also a tamilian.
Me: yeah. I know. அதனால தானே... I do not know whether telling to you is right or not. But anyways I have to tell you. I like her. வழியரோட முகத்தோட...
She: (Laughing..) I think she has a boy friend.
Me: Oh. (என்னுடைய முகம் சிறுத்தது. ok. I just wanted to say that I like her. It is not like I wanted you to tell. I was not able to see or meet her. That is why I told you. How to contact her?
She: I know her mobile number. (gave a thought)... No. I do not know whether I can give her number.
Me: It's ok she has already a boyfriend.
She: No. No. I am not sure. I was just kidding. I have just met her.
She: நான் என்ன பண்ணட்டும்?
Me: Just tell my intention and if she likes I can meet her.
She: Ok. I'll tell her. After that you can call or she can call you. :)
Me: Thanks. :)

அவள் அப்படி பேசியது ஒரு நம்பிக்கையை தந்தது. ஒரு மணி நேரம் கழித்து அவள் என்னை பார்த்த போது அவளே என்னிடம், "Don't worry Man. I will tell her. I don't want to tell her over phone. Today I will tell her in person." நான் - ரொம்ப thanks. :). அவள் மறுபடியும் அப்படி சொன்னது 'க்க்க்க்' உண்மையிலேயே எனக்கு ஒரு +ve result தருவாள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அன்று மாலை மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என்னுடைய நண்பர்கள் இது அறியாததால் நாங்கள் அவளை அன்றைக்கும் பஸ்ஸில் பார்த்தும் அவர்கள் எதுவும் பேசவில்லை. நான் 'ச்ச்ச்ச்' இடம் பேசியதால் பஸ்ஸில் பார்த்தும் பேச தேவையில்லை என்று விட்டு விட்டேன். அன்று இதைப் பற்றியே நினைத்து கொண்டு இருந்ததால் சரியான தூக்கம் கூட இல்லாமல் இருந்தேன். இதற்கு கடவுளிடம் வேண்டுதல் கூட நடந்தது.

புதன்:
அடுத்த நாள் காலையில் இதையே யோசித்து கொண்டு இருந்தேன். Result என்னவாக இருக்கும்? அலுவலகம் சென்று கேட்பதா? காலையிலேயே கேட்பதா? என்று பல நினைவுகள். எப்படியும் நல்ல reply தான் வரும் என்று ஒரு பெரிய நம்பிக்கையோடு இருந்தேன். வேலைக்கு கிளம்பினேன். ரயில்வே நிலையித்திலேயே 'ச்ச்ச்ச்' ஐ பார்த்தேன். என்னை பார்த்தும் பார்க்காதது போல இருந்தாள். அப்பவே result:=fail என்று தெரிந்து கொண்டேன். :) அதை உறுதி செய்து கொள்வோம் என்று அவளிடம் போய் கேட்டேன்.

இப்பவும் இங்கிலிஸ்.... :)
Me: Hi! என்ன ஆச்சு? கேட்டீங்களா?
She: Actually I didn't talk to her. Through a common friend I came to know that she has a boyfriend. She meets him outside it seems.
Me: எனக்கு ஒரு transformer வெடித்த மாதிரி இருந்தது. ஓ அப்படியா!
he: That is why I did not talk to her. It will put both of you in discomfort.
Me: It is ok. :( night சரியா கூட தூக்கம் வரல.:(
She: ஏன்?...... (இது என்ன கேள்வி?)

சரி அப்படியே பேசாமல் விட்டால் நல்லா இருக்காது என்று அவளை பற்றியும் அவள் வேலையைப் பற்றியும் விசாரித்தேன். பின்பு அமைதியானேன். ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது. 'ச்ச்ச்ச்' அந்த அளவுக்கு பில்டப் கொடுக்கவில்லை என்றால் கூட இந்த அளவுக்கு நம்பிக்கையா இருந்திருக்க மாட்டேன். நாம் ஆசைப் பட்டு எது கிடைத்திருக்கிறது என்று என் மேல் எனக்கே வெறுப்பாக இருந்தது. அன்று வேறு ஒரு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் திரும்பவும் ரயில் நிலையத்திற்கு சென்றேன். என்னுடைய கெட்ட நேரம் திரும்பவும் அவளை அங்கே பார்த்தேன். அன்றைக்கு வேறு அலைச்சல் அதிகமாக இருந்தது. சாப்பிட கூட நேரம் இல்லாமல் மாலை 4 மணிக்கு தான் சாப்பிட்டேன். அதற்கு அப்புறம் தான் எனக்கு நினைவுகளை அசை போட நேரமே இருந்தது. இப்பொழுது என் மூளை வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை ச்ச்ச்ச் இடம் அந்த common friend "உனக்கு ஏன் இந்த வீண் வேலை? அவன் யார் என்றே உனக்கு தெரியாது. ஏதாவது ஏடா குடமாக நடந்தால் அதற்கு நீ தான் பொறுப்பாவாய். பேசாமல் அவனை cut பண்ணி விடு. ஏதாவது சொல்லி க்க்க்க் ற்கு இஷ்டம் இல்லை என்று அவனிடம் சொல்லிவிடு" என்று சொல்லி ச்ச்ச்ச் இப்படி சொல்லி விட்டாளோ? நான் யோசிக்க காரணம் ச்ச்ச்ச் கொடுத்த அந்த பில்டப். என் மனம் க்க்க்க் இடம் பேசவே நினைத்தது. ஆனால் எதற்கு வந்தோமா; வேலை செய்தோமா; என்று செல்லாமல் ஏன் இப்படி பண்ணினேன் என்று ஒரு பக்கம் நினைக்க தோன்றியது.

வியாழன்:
அடுத்த நாள் ஒரு வேலையாக ஒரு அலுவலகம் சென்று என்னுடைய அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தேன். மணி 10:45ஐ தாண்டி இருந்தது. "இன்றைக்கு கண்டிப்பாக அவளை பார்க்க மாட்டேன்" என்று நினைத்து கொண்டு இருக்கையில், அவள் நான் வந்து கொண்டிருந்த அதே ரயிலில் ஒருவனோடு அவளும் ஏறினாள். "கடவுளே இது உனக்கே நல்லா இருக்குதா? நானே பார்க்க கூடாது என்று இருந்தால் நீ திரும்ப திரும்ப அவளை என் கண் முன்னே கொண்டு நிறுத்துகிறாய்?" என்று எனக்கு கோபமாக் வந்தது. ரயிலை விட்டு இறங்கினோம். என்னுடன் வேலை பார்க்கும் இன்னொருவன் என்னுடன் வந்ததால் அவனிடம் பேசிக் கொண்டே வந்தேன். என்னுடைய கெட்ட நேரம் அவள் வழக்கமாக போக வேண்டிய வழியாக செல்லாமல் நான் போகும் வழியிலேயே வந்தாள். ஒரு இருபது நொடியில் நான் அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். பின்னால் வந்து கொண்டிருந்த அவளிடம் பேசுவதற்காக திரும்பினேன்.

இங்கேயும் இங்கிலிஸ்.....
Me: Hi! நீங்க க்க்க்க் தானே?
She: Yeah.
Me: TCS தானே?
She: Yeah.
Me: நான் முருகானந்தம். இன்போஸிஸ்ல ஒர்க் பண்றேன்.
She: puzzled.... ok.
Me: I do not know whether this is the right place to tell you or not? எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. :)
She: ஒரு பெரிய.. EXXXXXXX....CUUUUUU....SSSSEEEEE MEEEEEEEE......? (இது கூட அழகாக தான் சொன்னாள்) :)
Me: It does not mean that I have fallen... பேசலாம்....
She: ஒரு பெரிய சிரிப்புடன் ... எனக்கு நிங்க யாருனெ தெரியாது.....
Me: yeah. எனக்கும் தான். பேசலாம்...
Me: Let us be friends..
She: அது ok. But I don't think so I can take it to the next level..
அதற்குள் ஆட்டோமேடிக் கதவு திறந்தது. நான் என்னுடைய அக்ஸஸ் கார்டு வைத்து உள்ளே நுழைந்தேன். அவள் reception சென்று ஒரு sign போட்டு விட்டு நான் இருக்கும் பக்கத்திற்கு எதிர் பக்கமாக சென்றாள் பதில் சொல்லாமலேயே.. :(

நானும் இது சரி வராது என்று நினனத்து கொண்டு நான் இருக்கும் ஆறாவது மாடிக்கு சென்றேன். அவளுடைய பெயர் தெரிந்திருந்ததால், அவளுடைய மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடித்து அவளுக்கு ஒரு அஞ்சல் அனுப்பினேன். அதில் "You have mistaken me. I am bit practical and that is why I spoke to you. I have just told you "I like you". Nothing more than that. If you are in a situation in which you cannot accept anything you could have always told me that you are not interested in anything. I got that you are not interested. If I had disturbed you I am sorry" என்று எழுதியிருந்தேன். அதற்கு பதில் வராது என்று எனக்கு தெரியும். "அவளுக்கு தான் அனுப்பினேனா?" :) என்று தெரியவில்லை. மதிய உணவுக்கு செல்லும் போது அவளைப் பற்றி பேசிக் கொண்டே சென்றேன். கடவுள் என்னை விடுவதாக இல்லை. நான் நுழையும் போது என் எதிரே நின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் தலை கவிழ்ந்தாள். எனக்கும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. அப்பவே ச்ச்ச்ச் "you both will be put in discomfot" என்று சொன்னாள். அதை கேட்காமல் இதை செய்தேனே என்று..

அன்று மாலை கடைக்கு சென்று விட்டு 7:30 மணிக்கு மேல் தான் பஸ்ஸில் ஏறினோம். ஏறியவுடன் அவள் இல்லை என்பதை கவனித்தேன். ஒரு இருக்கையில் உட்கார்ந்து ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்தேன். அந்த கண்ணாடியில் அவள் உருவம். அட அவளும் பஸ்ஸில் தான் உட்கார்ந்திருந்தாள். கடவுள் என்னை விடுவதாக தெரியவில்லை. "அவள் இல்லை என்று முடிவு செய்ய பட்டு விட்டது. இதற்கு மேல் எதுவும் நடக்காது மச்சி" என்று என் உள் மனம் சொல்லியது எனக்கு கேட்டது.

வெள்ளி:
மறுநாளும் அவளை காலையிலேயே பார்க்க நேர்ந்தது. என்னுடைய அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்கிறவர்களை கூட நான் தினமும் பார்த்ததில்லை. யப்பா...... மதிய உணவு பொழுதும் பார்த்தேன். அட ச்சீ இது இப்படி தான் நடக்கும் போல என்று முற்றிலுமாக விட்டு விட்டேன். மதியம் ஆர்குட்டில் அவளை தேடினேன். Profile கிடைத்தது. அவள் தமிழ் பெண் என்பதை தவிர வேற அதுவும் எனக்கு ஒத்து வராது என்று தெரிந்தது. அவள் தமிழ் நாட்டில் வாழவில்லை. பெரிய இடத்து பெண். மொத்தத்தில் HIGH_CLASS.
இதற்கிடையில் க்க்க்க் விஷையத்தை வெளியே சொல்லி ச்ச்ச்ச் கு தெரிந்து விட்டதோ என்று ஒரு சந்தேகம். அதனால் எப்பொழுது ச்ச்ச்ச் ஐ பார்த்தாலும், "ஏண்டா டேய்! நான் அவ்வளவு சொல்லியும் நீ கேக்கல இல்ல. உனக்கெல்லாம் உதவியே பண்ணி இருக்க கூடாதுடா!" என்று என்னைப் பார்த்து சொல்வது போலவே உணர்வு. எப்படியும் ச்ச்ச்ச் கு தெரிந்திருக்க தான் வேண்டும்.

எல்லாம் நன்மைக்கே....... ? I do not know. :)

8 Comments:

Post a Comment

<< Home