மதுரை மீனாட்சி - 4

மதுரை மீனாட்சி - 1
மதுரை மீனாட்சி - 2
மதுரை மீனாட்சி - 3
மீனு குட்டி! எனக்கு உன்ன மூணு வருஷமா தெரியும் ஓகேவா?
இல்ல...அது வந்து..அது வந்து..
"இப்படி எல்லாம் பேசுவேன்னு பார்த்தியா? அதெல்லாம் ஒன்னும் இல்ல. பேசனும்னு தோனிச்சு. அதான் பேசினேன். நான் பேசினா கூட தப்பா?", ரொம்ப நார்மலாக மீனாட்சி சொல்லி சிரித்தாள்.
சரிகா ஒரு பெண்ணாக இருந்தும் மீனாட்சி சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் திணரினாள்.
"சரி. இதுக்கு மேல உன்கிட்ட கேட்டா ரொம்ப ஓவரா பேசுவ. நா வீட்டுக்கு கிளம்பறேன்", சரிகா கொஞ்சம் நக்கலாகவே சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
மீனாட்சி தான் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இரவு முழுதும் யோசித்துக் கொண்டிருந்தாள். முடிவே இல்லாமல் உறங்கினாள்.
சிவாவிற்கோ இங்கு வேறு மாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. "அமைதியான போண்ணுனு நினைச்சா இவ இப்படி பொளந்து கட்றா. ஆனா சரிகாவோட எக்ஸ்ப்ரஸன பார்த்தா இன்னைக்கு தான் இப்படி பண்றானு நினைக்கறேன். நம்ம கையில என்ன இருக்கு. எல்லாம் அவன் கையில தான் இருக்கு" சிவா கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு தூங்கிப் போனான்.
அன்று முதல் அவனுடைய சாட் மெஸெஞ்சர் கொஞ்சம் பிஸியாகவே இருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னவெல்லாம் நடந்ததோ அது எல்லாம் சிவாவிற்கும் தெரிய வந்தன. அவளுக்கும் அப்படி தான். மீனாட்சி தான் இது வரை யாரிடமும் இந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததற்குக் காரணத்தைப் புரிந்து கொண்டாள்.
ஒரு மாதம் எப்படி போனதே என்று தெரியவில்லை சிவாவிற்கு. என்னதான் சாட் மெஸெஞ்சரில் பேசினாலும் அவர்கள் செல் பேசியில் பேசுவது மிகக் குறைவு. ஏனோ இருவரும் அதைப் பற்றி பேசியதும் இல்லை. சரிகாவிற்கு இது எல்லாம் தெரிந்தும் மினாட்சியிடம் கேட்க எண்ணமில்லை. மீனாட்சி முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பதை சரிகாவும் உணர்ந்தாள். இப்பொழுதும் கூட சரிகாவும் சிவாவும் மட்டுமே மதிய உணவு அருந்தினார்கள்.
ப்ராஜக்ட் வேலை முடிந்து அவனுக்கு சென்டாப் கொடுக்கும் நாளும் வந்தது.
"ஏன் இவ்வளவு சீக்கிரமா ப்ராஜக்ட் முடிஞ்சது. சே!" என்று சிவா சரிகாவிடம் சலித்துக் கொண்டான்.
"ஏன் சார்! இவ்வளவு சலிச்சுகறீங்க. சீக்கிரமா முடிச்சதுக்கு அப்பிரிசியேஷன் மெயில்லெல்லாம் வாங்கி இருக்கீங்க", சரிகா அவன் எதைக் காரணமாக சொல்லுவான் என்று அறிந்திருந்தாள்.
"இல்ல. இப்படி ஒரு நல்ல டீம விட்டுட்டு போறோமேனு தான்", சிவா தான் பொய் சொல்லுவதை உணர்ந்து அசடு வழிந்தான்.
மீனாட்சி அவனுக்காக ஒரு அழகிய எழுது கோலை கிப்ட்டாக அளித்தாள். பிரிய போகிறோம் என்ற கவலை இருவருக்குமே இல்லாமல் போனதற்குக் காரணம் அவர்கள் நட்புடன் பழகியது தான். மேலும் அவர்கள் ஒரு முறை கூட வெளியில் சந்தித்ததில்லை.
"ஸோ. ஹைதராபாத் கிளம்பிட்டிங்க. ரொம்ப சந்தோஷமா?" மீனாட்சி தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்தாள்.
"எப்பவும் போல தான். எல்லா இடமும் எனக்கு ஒண்ணு தான். நீ கண்டிப்பா ஹைதராபாத் வரணும்."
"ஹலோ சார். என்னனா கூப்பிட மாட்டீங்களா?" சரிகா கொஞ்சம் கோவமாகவே கேட்டாள்.
"எல்லாரும் வரலாம்" சிவா சமாளித்தான்.
சிவா ஹைதராபாத் வந்ததற்கு அப்புறம் அவர்களுடைய சாட் தொடர்ந்தது.
ஒரு நாள் "காபிக்கு போலாமா?" மீனாட்சி சிவாவிடம் சாட்டில் கேட்டாள்.
"என்ன கிண்டலா இருக்கா? நான் சென்னையில இருக்கிற வரைக்கும் ஒரு தடவையாவது கேட்டிருக்கயா? இப்போ நான் இல்லனு உடனே கேக்கற"
"அய்யோ உண்மையா தான் கேக்கறேன். ஒகேனா புட் கோர்ட் வாங்க."
சிவா சற்றே குழம்பி போனான். "சரி", என்று பதிலளித்தான். அவளுடைய ஸ்டேடஸ் அவேவிற்கு மாறியது.
"சரி வெட்டியா தானே இருக்கோம். போய் தான் பார்ப்போம். என்ன ஒன்னு பல்ப் வாங்கனுமானு யோசிக்கறேன்" சிவா மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டு கிளம்பினான்.
புட் கோர்ட்டில் அவள். தன் கண்ணையே நம்ப முடியவில்லை சிவாவிற்கு.
"ஹாய்! எப்படி இருக்கீங்க. என்ன எதிர்ப் பார்க்கல இல்ல." மீனாட்சி பேசிக் கொண்டே போனாள்.
"பல்ப் கொடுக்க போறியோனு நினைச்சேன். என்ன சொல்ல கூட இல்லமால் இங்க. டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டியா?" சிவாவின் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் போனது.
"ஆமா இங்க வரதுக்கு எனக்கு ஆசையா என்ன? என்னோட ப்ராஜக்ட் வேளையா ஒரு மூனு மாசம் இங்க தான்".
சிவாவின் முகம் கொஞ்சம் வாடிப் போனது. வெளியே காட்டிக் கொள்ளாமல் "சரி வா காபி சாப்பிடலாம்."
ஹைதராபத்திலும் அவர்கள் நட்பு எந்த ஒரு பாதிப்பும் இன்று நகர்ந்தது. அப்பப்போ காபி, லன்ச், வெளியே போவது என்று இருந்தார்கள். இருவரின் மனதிலும் நட்பு மட்டுமே குடி கொண்டிருந்தது.
மதுரை மீனாட்சி மதுரைக்குத் தான் சொந்தம். :)
(முற்றும்)

21 Comments:
At Sunday, September 14, 2008 11:30:00 PM,
ஜியா said…
Dei... ennaiya kolakarana aakaatheenga... ellaa kathailaiyum enda ippadi pirichi vachidureenga??
unmai kathai ngrathunaala freeya viduren ;))))
At Monday, September 15, 2008 1:00:00 AM,
Anonymous said…
machan,
romba interestinga irunthuchu. appadiye oru visual pottu parthen ... innum supera irukku.
don't finish the story. keep writing. avargal nanbargalaga mattum iruppathaivida .. adutha kattathukku sellalam. waiting for the next part.
At Monday, September 15, 2008 4:20:00 AM,
Divya said…
iyo....thodar athukula mudinjiduchcha:(
romba nalla kathai nagarthitu poneenga, yein ipdi tuknu niruthiteenga???
avanga rendu perum friends nu mudivu eluthanumnu ipdi abrupt aa mudicheenglo??
At Monday, September 15, 2008 4:30:00 AM,
Anonymous said…
இது ஒரு உண்மை கதையா??
உரையாடல்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது முருக்ஸ்:))
At Monday, September 15, 2008 4:33:00 AM,
Anonymous said…
இந்த கதையில் சரிகா கதாபாத்திரத்தின் பங்கு என்ன??
சும்மா ஒரு ஃபிரண்டா??
ஆனா......அப்படி தோனலியே......அடிக்கடி அவங்களோட பொஸஸிவ்னஸ் கதையில கோடு போட்டு காட்டிருக்கிறீங்க:))
ஆனா மத்தப்படி சரிகாவுக்கும் கதாநாயகனுக்கும் நட்பு மட்டுமேன்னு கொண்டு போயிருக்கிறீங்க, நல்லாயிருக்கு!
At Monday, September 15, 2008 4:34:00 AM,
Anonymous said…
தொடர்ந்து கதைகள்[தொடர்] எழுத என் வாழ்த்துக்கள்!!
At Monday, September 15, 2008 7:12:00 AM,
Hariks said…
//unmai kathai ngrathunaala freeya viduren//
ஃப்ரீயா விட்டதுக்கு நன்றி ஜி. :)
At Monday, September 15, 2008 7:13:00 AM,
Hariks said…
Thanks for the Comments Manoj. Story mudinchiduchu. :)
At Monday, September 15, 2008 7:15:00 AM,
Hariks said…
//avanga rendu perum friends nu mudivu eluthanumnu ipdi abrupt aa mudicheenglo??//
ஆமாம் திவ்யா. ஃப்ரெண்ட்ஸ்கு வேற எப்படி கதை எழுதறதுனு தெரியல. அதான் அப்படியே முடிச்சுட்டேன் :)
At Monday, September 15, 2008 7:20:00 AM,
Hariks said…
//ஆனா......அப்படி தோனலியே......அடிக்கடி அவங்களோட பொஸஸிவ்னஸ் கதையில கோடு போட்டு காட்டிருக்கிறீங்க:))//
may be as a friend irukalaam.
At Monday, September 15, 2008 7:28:00 AM,
Hariks said…
//தொடர்ந்து கதைகள்[தொடர்] எழுத என் வாழ்த்துக்கள்!!//
நன்றி திவ்யா!
At Tuesday, September 16, 2008 7:40:00 PM,
Divyapriya said…
//சரிகா ஒரு பெண்ணாக இருந்தும் மீனாட்சி சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் திணரினாள்.//
இதென்ன புதூ லாஜிக்? பொண்ணுகளுக்கு பொண்ணுங்க மனசு புரியும்ன்னா சொல்றீங்க? அவங்க மனசுல நினைக்கறது யாருக்குமே புரியலன்னா தான் அவங்க பொண்ணுங்க ;-)
At Tuesday, September 16, 2008 7:41:00 PM,
Divyapriya said…
//எழுது கோலை கிப்ட்டாக அளித்தாள்.//
ரொம்ப தமிழ் விளையாடுது? ;-)
ஒன்னா பென் கிப்ட்டாக அளித்தாள் ன்னு போடனும், இல்ல எழுது கோலை பரிசளித்தாள் ன்னு போட்டிருக்கனும், ஏன்? ஏன் இப்படி? எனக்கு புரியவே இல்ல ;-)
At Tuesday, September 16, 2008 7:41:00 PM,
Divyapriya said…
//ஒகேனா புட் கோர்ட் வாங்க//
இது எங்க இருக்கு ??
At Tuesday, September 16, 2008 7:41:00 PM,
Divyapriya said…
அடப்பாவமே கதை முடிஞ்சிருச்சா? :-( ப்ளாக் உலக விதிகள எதுவுமே ஃபாலோ பண்ணாம, இப்படி திடு திப்புன்னு கதைய முடிச்சதை நான் வண்மையா கண்டிக்கறேன் ;-)
ஒன்னா, one side love ஆவது இருக்கனும், இல்லன்னா ஒரு success story…ரெண்டுமே இல்லையா!?!?! :-(
//மதுரை மீனாட்சி மதுரைக்குத் தான் சொந்தம். :)//
சரி அது யாருங்க அந்த புதூ காரக்டரு மதுரை? அவர பத்தி நீங்க சொல்லவே இல்லை ;-)
At Tuesday, September 16, 2008 7:42:00 PM,
Divyapriya said…
கதை, வசனம் எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு...
அடுத்த முறை இன்னும் அதிகமாக பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்...
At Wednesday, September 17, 2008 8:02:00 AM,
Ramya Ramani said…
பிரிச்சிட்டீங்களா???????????? ஏன் ஏன் எதுக்கு இப்படியெல்லாம் ?
ஆனா சும்மா சொல்ல கூடாது கலக்கறீங்க...
At Sunday, September 21, 2008 10:51:00 PM,
Hariks said…
//பிரிச்சிட்டீங்களா???????????? ஏன் ஏன் எதுக்கு இப்படியெல்லாம் ?
ஆனா சும்மா சொல்ல கூடாது கலக்கறீங்க...//
நன்றி ரம்யா!
At Sunday, September 21, 2008 10:56:00 PM,
Hariks said…
////ஒகேனா புட் கோர்ட் வாங்க//
இது எங்க இருக்கு ??//
இதைப் பிரித்து, "ஓகே என்றால் புட் கோர்ட் வாங்க" என்று படிக்க வேண்டும். அடுத்த பதிவில் இருந்து இன்னும் அதிகமா பிரித்து எழுதுவதில் கவனம் செலுத்தறேன். :)
//சரி அது யாருங்க அந்த புதூ காரக்டரு மதுரை? அவர பத்தி நீங்க சொல்லவே இல்லை ;-)//
என்னங்க பண்றது, மதுரை பொண்ணுங்க மதுரை பசங்கள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்காங்க ;)
//அடுத்த முறை இன்னும் அதிகமாக பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்...//
நன்றி திவ்ய பிரியா!
At Friday, October 03, 2008 9:21:00 PM,
ஜியா said…
Ennade?? no update???
At Wednesday, November 05, 2008 2:27:00 AM,
Anonymous said…
அருமையான எழுத்துக்கள்....வாழ்த்துக்கள்.
Post a Comment
<< Home