Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Sunday, July 27, 2008

பிங்கிக்கு பிற‌ந்த‌நாள்!


இன்று உன்னை
காண‌ முடிய‌வில்லையே
என்ற‌ ஏக்க‌த்தால்
அந்த‌ வானம் கூட‌
அழுத‌தோ?

அல்ல‌து,
இந்த‌ தேவ‌தையின்
பாத‌ம் ந‌னைக்க‌
பூமிக்கு
வானிருந்து
கீழ் இற‌ங்கிய‌தோ?

அல்ல‌து,
இந்த‌ பூமிக்கு
விருந்து படைக்க‌
ம‌ழை பூவாக‌ தூவிய‌தோ?

உன் பிற‌ந்த‌நாள் அன்று
இந்த‌ ஹைத‌ராபாத்
ந‌க‌ர‌ம் கூட‌
சொர்க்க‌மாக‌ ஆகிய‌து
உன் வ‌ருகையை
எதிர்ப்பார்த்து!

அந்த‌ ம‌ழையின்
ஒரு
துளியாக‌
என்னுடைய‌
வாழ்த்துக்க‌ள்!

~முருக்ஸ்

Labels: