காதல் நிஜம் கலந்த காதல் கதை

உலகத்திலேயே யார் அதிகமா புண்ணியம் பண்ணியிருக்காங்கனு கேட்டிங்கனா, அது நான் தானென்று சொல்வேன். அதற்கு காரணம் என்னுடைய குடும்பம். நான் சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு அங்கேயே ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்கிறேன். அழகான மனைவி, ஒரு பெண் குழந்தை. முதலில் என் மனைவியை பற்றி சொல்கிறேன். அவள் கடவுளை விட என்னை தான் அதிகமாக மதிப்பாள். ஆனால் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு கண்டிப்பாக போய் விடுவாள். நானும் அவள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். என்ன தான் மதிப்பு வைத்திருந்தாலும் அவள் ஒவ்வொரு முறை கோயிலுக்கு போகும் போது என்னை அழைத்தாலும் நான் போவதில்லை. ஏனென்றால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என்னுடைய நான்கு வயது குழந்தை என் மனைவியை போல் மிகவும் அழகானவள்; சுட்டி தனம் மிக்கவள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் என்னை விட என் மனைவிக்கு ஆர்வம் அதிகம் உண்டு. என் மனைவி பொறியியல் படித்திருந்தாலும் வீட்டை மட்டும் ஆள்கிறாள். இப்பொழுது தம்பி பாப்பாவுக்கு வழி செய்யாலமா என்று யோசித்து கொண்டு இருக்கிறோம். ;)
அப்படி இருக்கையில் ஒரு நாள், என்னுடைய செல் போனுக்கு ஒருவன் கால் செய்தான். அவன் தன்னை "ரவி" என்று அறிமுகம் செய்து கொண்டு என்னை மிகவும் தெரியும் என்றும் சொன்னான். அவன் என்னை சந்திக்க வேண்டும் உங்களால் இன்று மாலை 5:30 மணிக்கு cafe day வர முடியுமா என்று கேட்டான். நான் அவனை தொலை பேசியிலேயே பேசலாம் என்று சொன்னேன். அவன் "இல்லைங்க உங்கள நேர்ல பார்த்து தான் பேச வேண்டும்" என்று சொன்னான். நானும் சரி என்று சொல்லி காலை கட் செய்தேன். அன்று சாயுங்காலம் வரை அதை பற்றியே என்னுடைய சிந்தனை இருந்தது. மணி ஐந்தை எட்டியதும் என்னுடைய காரை எடுத்து கொண்டு என் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு cafe day பக்கமாக சென்றேன். அங்கு இருந்த ஐஸ்க்ரீம் கடையில் ஒரு ஐஸ்க்ரீமை வாங்கி என் குழந்தையிடம் கொடுத்து விட்டு அவனுக்காக காத்திருந்தேன். அவன் வந்தான்; மெலிந்த உருவம்; கண்ணில் சோகம். தன்னை மறுபடியும் அறிமுகபடுத்தி கொண்டு பேச ஆரம்பித்தான்."சார்! நான் உங்களுடைய மனைவியின் கல்லூரியில் க்ளாஸ் மேட். நாங்கள் இருவரும் காதலர்களாக இருந்தோம். இது உங்களுக்கு தெரியும் என்று நம்பிக்கை இருக்கு. ஏன்னா அவள் தன் நெருங்கியவர்களிடம் எதையும் மறைக்க மாட்டாள்.
என்னடா ஏன் இவன் இதை எல்லாம் இப்ப சொல்றான்னு பாக்கறீங்களா? அதற்கு ஒரு காரணாம் இருக்கு. நாங்கள் கல்லூரியிலேயே பிரிந்து விட்டோம். எனக்கு "ப்ளட் கேன்ஸர்" (Blood Cancer) என்று கல்லூரி முடிவதற்கு சற்று முன்பு தான் தெரிந்தது. அதில் இருந்து அவளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். அவளை வெறுப்பதை போல நடிக்க ஆரம்பித்தேன். அவள் எவ்வளவோ போராடியும் என்ன காரணம் என்று அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. கல்லூரி முடிந்ததும் நான் வேறு ஊருக்கு சென்று விட்டேன். காலப்போக்கில் அவள் என்னை மறந்து உங்களை திருமணம் செய்து கொண்டாள் என்று கேள்வி பட்டேன். இப்பொழுது நான் இங்கு வந்திருப்பதின் காரணம், எனக்கு டாக்டர் நாள் குறித்து விட்டார். நான் சாகும் முன்பு அவளை ஒரு முறை, ஒரே ஒரு முறை உங்களுடைய அனுமதியுடன் பார்க்க ஆசை படுகிறேன். அதுவும் அவளுக்கு தெரியாமல் தான்." என்று சொல்லி முடித்ததும் ஒரு புயல் அடித்து முடிந்த மாதிரி இருந்தது. என்னால் "சரி!" என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. மறுநாள் முருகன் கோயிலுக்கு கூட்டி வருவதாக சொன்னேன்.
அன்று தான் நினைவுக்கு வந்தது, என்னுடைய மனைவி இவனை பற்றி சொல்லி இருந்தது. அவர்கள் பிரிந்ததையும் சொல்லி இருந்தாள். மறுநாள் வேலைக்கு போகும் முன்பு என் மனைவியிடம் "ஹனி இன்னைக்கு முருகன் கோவிலுக்கு போகலாம் என்று சொன்னேன்". அவள் "என்ன திடிரென்று கோயிலுக்கு கூப்பிடறீங்க?" "சும்மா தான்". அன்று மாலை வீட்டுக்கு வந்து அவளை கூட்டி கொண்டு முருகன் கோயிலுக்கு போனேன். அவன் எனக்கே அடையாளம் தெரியாதது போல் வந்திருந்தான். தலையில் ஒரு முண்டாசு; காவி உடை. மறைந்து நின்று அவன் என் மனைவியை கண்ணீர் மல்க பார்த்து விட்டு எனக்கு நன்றியும் சொல்லிப் போனான். என் மனைவியிடம் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. அன்று ஒரு மன திருப்தியுடன் உறங்க ஆரம்பத்தேன். நடு இரவில் யாரோ விம்மி அழும் சத்தம் கேட்டது. எழுந்து பால்கனி பக்கம் போய் பார்த்தேன். அன்று தான் முதன் முதலில் என் மனைவி தனியாக அழுவதை பார்த்தேன் என் கண்களில் கண்ணீருடன். உண்மையான காதல் என்றுமே மறக்க முடியாதது. ஏனோ அவளிடம் என் காதலை மறைத்துவிட்டது மனதை உறுத்தியது.
இதில் நிஜம் என்னவென்று கேட்டால் உண்மையான காதலை யாராலும் மறக்க முடியாது. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. பெண் அதை மறந்து வேறொரு வரை மணந்து கொள்வாள் என்று பலர் நினைத்து கொண்டு இருக்கிறார். அவள் சமுகத்திற்காக மணந்து கொண்டாலும் உண்மையான காதலை ஆணைப் போல அவளும் மறப்பதில்லை.